பத்து வருடத்திற்குப் பிறகு விஜய்யை சந்தித்த டேனியல் பாலாஜி

201606181405405307_After-Ten-year-Daniel-Balaji-met-Vijay_SECVPF‘தெறி’ படத்திற்குப் பிறகு விஜய் தற்போது ‘விஜய் 60’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் ஜெகபதி பாபு, சதீஷ், டேனியல் பாலாஜி, மைம் கோபி, ஹரிஷ் உத்தமன், ஸ்ரீமன், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

பல படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற டேனியல் பாலாஜி, இந்த படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இப்படம் குறித்து டேனியல் பாலாஜி கூறும் போது, ‘தற்போது விஜய் 60 படப்பிடிப்பில் நடித்து வருகிறேன். பத்து வருடங்களுக்குப் பிறகு விஜய்யை சந்திக்கிறேன். அப்போது இருந்த அதே அன்பும், அரவணைப்போடும் என்னை வரவழைத்தார்’ என்றார்.

நெல்லையில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். பரதன் இயக்கி வரும் இப்படத்தை விஜயா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries