அமீர் இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா?

201606191838067352_Ameer-direct-new-movie-arya-acting_SECVPFஆர்யா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது. இப்படங்களுக்குப் பிறகு இவர் நடிப்பில் வெளியான எந்த படமும் சரியாக ஓட வில்லை. வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்று முனைப்போடு தற்போது இவர் ‘கடம்பன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு இவர் அமீர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

‘ராம்’, ‘பருத்தி வீரன்’ என்ற வெற்றி படங்களை கொடுத்த அமீர், கடைசியாக ‘ஆதி பகவான்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதையடுத்து படம் இயக்காமல் இருந்த அமீர் தற்போது ஆர்யாவை வைத்து படம் இயக்க இருக்கிறார்.

ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries