விஸ்வரூபம் இரண்டாம் பாகம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல்கள்

201606191114512374_Vishwaroopam-part-two-release-plan-new-details_SECVPFகமல் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘விஸ்வரூபம்’. இப்படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து பின்னர் ஒருவழியாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இரண்டு பாகமாக எடுக்கப்பட்ட இப்படத்தை முதல்பாகம் தயாராகும் போதே, இரண்டாம் பாகத்துக்கான சில காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன.

கமல் தயாரித்து, இயக்கி, நடித்து வெளிவந்த ‘விஸ்வரூபம்’ வெற்றிபெற்ற பிறகு இரண்டாம் பாகத்திற்கான மீதி காட்சிகளையும் படக்குழுவினர் படமாக்கி வந்தனர்.

இந்நிலையில், கிட்டத்தட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையிலும், இப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவல்களை படக்குழுவினர் வெளியிடவே இல்லை.

இந்நிலையில், தற்போது ‘விஸ்வரூபம்’ 2-ம் பாகம் எப்போது வெளியாகும் என்ற தகவலை படக்குழுவினர் கசிய விட்டுள்ளனர். அதன்படி, வருகிற தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

படத்தின் கோர்வைக்காக சில காட்சிகளை படமாக்க உள்ளதாகவும், மேலும், கிராபிக்ஸ் காட்சிகளுக்கான சில வேலைகள் உள்ளதாகவும், இவை அனைத்தையும் முடித்துவிட்டு படத்தை தீபாவளிக்கு வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.

மேலும், கமல் தற்போது ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், இப்படம் முடிந்த பிறகு ‘விஸ்வரூபம்’ 2-ம் பாகத்திற்கான பணிகளில் தீவிரம் காட்டுவார் என்றும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries