மச்சினி கதையில் நடிக்கிறாரா தனுஷ்?

201606191049356210_Dhanush-act-in-soundarya-rajinikanth-script_SECVPFசூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகளும், தனுஷின் மச்சினியுமான சவுந்தர்யா ‘கோச்சடையான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளிவந்த அப்படம் முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக அமைந்தது. இந்திய சினிமாவில் முதல் முயற்சியாக வெளிவந்த ‘கோச்சடையான்’ படம் ரசிகர்களிடையே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து படங்களை இயக்கும் வாய்ப்பை தள்ளிவைத்திருந்த சவுந்தர்யா, தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கும் பணியில் தீவிரமாகியிருப்பதாக கூறப்படுகிறது. தனுஷுடன் இணைந்து ஒரு ரொமான்டிக் காமெடி படத்துக்கான கதையை சவுந்தர்யா தயார் செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இப்படத்தின் கதை விவாதத்தில் மட்டும் தனுஷ் கலந்துகொள்வாரா? அல்லது தனுஷே இந்த படத்தில் நடிக்கவிருக்கிறாரா? என்பது குறித்து எந்த விவரங்களும் வெளிவரவில்லை. கதை தயாரான பிறகு இந்த படத்தில் யார் நடிப்பார்கள் என்ற விவரம் தெரிய வரும் என்று நம்பப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online