பவன்கல்யாண் படத்திலிருந்து விலகிய எஸ்.ஜே.சூர்யா

201606201607202358_SJ-Surya-re-leave-pawan-kalyan-movie_SECVPFஇயக்குனராக இருந்து நடிகராக மாறிய எஸ்.ஜே.சூர்யா, கடைசியாக நடித்து வெளிவந்த ‘இறைவி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டதால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வாய்ப்பு குவிந்து வருகிறது.

இதன் காரணமாக எஸ்.ஜே.சூர்யா, தெலுங்கு பவர் ஸ்டார் பவர் கல்யாணை வைத்து படம் ஒன்றை இயக்குவதாக இருந்தது. ஆனால், இப்போது அந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக ‘கோபாலா கோபாலா’ படத்தை இயக்கிய டோலி என்பவர் இயக்குவார் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஜே.சூர்யா தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online