நடிகை விஜயசாந்தி வீட்டில் நகை கொள்ளை

201606192109432151_Actress-vijayashanthi-robbery-at-home_SECVPFதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கடந்த 1980 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் விஜயசாந்தி. இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘மன்னன்’, கமல்ஹாசன் நடித்த ‘இந்திரன் சந்திரன்’ உள்பட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். குறிப்பாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர் தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவர் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் என்ற பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அரசியல் பணி காரணமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் விஜயசாந்தி அதேபோல் வெளியூர் சென்றிருந்தபோது மர்ம மனிதர்கள் அவரது வீட்டின் உள்ளே புகுந்து அங்கிருந்த விலை உயர்ந்த வைர மோதிரம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து விஜயசாந்தியின் சகோதரர் பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது, வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries