சிவகார்த்திகேயன் பட போஸ்டரை வெளியிடும் சங்கர்

201606212059574528_shankar-releasing-sivakarthikeyan-remo-poster_SECVPFசிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ரெமோ’. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், அனிருத் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் கைகோர்த்து பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் ஹாலிவுட் மேக்கப் மேன் சீன் பூட்ஸும் பணியாற்றி வருகிறார்.

மேலும், கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் மூலம் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஜூன் 23ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சிங்கிள் பாடல் ஒன்றையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த போஸ்டரை ‘அந்நியன்’ படத்தில் ரெமோ என்ற கதாபாத்திரத்தை உருவாக்கிய சங்கர்தான் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ பட போஸ்டரையும் சிங்கிள் பாடலையும் வெளியிட இருக்கிறார்.

இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online