விஜய் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

201606211806348844_Vijay-birthday-welfare-help-to-poor_SECVPFவடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி சிவா தலைமையில் 11 குழந்தைகளுக்கு 2 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. தையல் மிஷின், அன்னதானமும் வழங்கப்படுகிறது. மத்திய சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பூக்கடை குமார் தலைமையில் விருகம்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் 280 பேருக்கு உடைகள், உணவு வழங்கப்படுகிறது.

தென்சென்னை மாவட்ட தலைவர் அப்புனு தலைமையில் வடசென்னை கோவிலில் சிறப்பு பூஜை, அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

காஞ்சீபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் இ.சி.ஆர்.சரவணன் தலைமையில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், தாம்பரம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 42 கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது.

இதில் தினேஷ், பாலாஜி, சின்னு, ரகீம், ஜேம்ஸ், ஆனந்து, பத்திரி பாலா, பிரபு, சரத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி நகரம் சார்பில் ஆதரவற்ற இல்லத்தில் 110 குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. பெயர் பலகை திறக்கப்படுகிறது. மாவட்ட பொறுப்பாளர் எஸ்.விஜய குமார் நகர தலைவர் சி.கிருபாகரன், திருமலை, வெங்கட், ஹரி, ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் பால முருகன் தலைமையில் ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் என்.ஆனந்து பங்கேற்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online