கதாநாயகர்களை கட்டிப்பிடிக்க மாட்டேன்: மடோனா நிபந்தனை

201606211733227599_will-not-hug-Heroes-Madonna-condition_SECVPF‘பிரேமம்’ மலையாள படத்தின் நாயகிகளில் ஒருவர் மடோனா. இவரது நடிப்பு சிறப்பாக இருப்பதாக பேசப்பட்டது. இதையடுத்து, விஜய்சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

இப்போது பிரேமம் தெலுங்கு ‘ரீமேக்’கில் நடித்து வருகிறார். அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்துக்கும் மடோனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதில், மீண்டும் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேருகிறார்.

இந்த நிலையில், ‘காதல் காட்சிகளில் ஹீரோக்களை கட்டிப்பிடித்து நடிக்க மாட்டேன்’ என்று மடோனா நிபந்தனை விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரேமம் படத்தில் மடோனா நடித்த போதே, காதல் காட்சியில் நடிப்பேன். ஆனால் கதாநாயகனை கட்டிப்பிடிக்க மாட்டேன். நடனம் ஆடுவேன் அதில் கவர்ச்சி உடை அணிய மாட்டேன் என்ற நிபந்தனையுடன்தான் நடித்தார் என்று கூறப்படுகிறது.

காதலும் கடந்து போகும் படத்தில் நாயகனை கட்டிப் பிடிக்கும் காட்சி இல்லை. ஆனால், மது அருந்திவிட்டு இரண்டு பேரும் ஒரே படுக்கையில் புரள்வது போன்ற காட்சி அதில் இடம் பெற்றிருந்தது. ‘நாயகனை கட்டிப் பிடிக்க மாட்டேன்’ என்ற மடோனாவின் அறிவிப்பால், இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவரை தங்கள் படத்துக்கு நாயகி ஆக்கலாம் என்று திட்டமிட்டிருந்த இயக்குனர்கள் இப்போது தங்கள் படத்துக்கு வேறு நடிகைகளை தேடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries