முருகதாசுக்காக முதன்முறையாக மாறும் மகேஷ் பாபு

201606211603158305_Mahesh-Babu-for-first-time-will-become-murugadoss_SECVPFதெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘பிரம்மோற்சவம்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், இவர் அடுத்ததாக தமிழ், தெலுங்கில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரனிதி சோப்ரா நடிக்கவிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் மகேஷ்பாபுவின் தோற்றம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இப்படத்தில் மகேஷ்பாபு முதன்முறையாக அடர்த்தியான மீசை மற்றும் தாடியுடன் வருகிறாராம்.

இதுவரை தாடியில்லாமல், லேசான மீசையுடன் நடித்து வந்த மகேஷ்பாபுவின் புதிய தோற்றம் ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இந்தியில் இயக்கி வரும் ‘அகிரா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 2-ந் தேதி வெளியாகவுள்ளது. இதன்பிறகு, இப்படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries