இயக்குனர் மிஷ்கின் இயக்கும் புதிய படம்

201606210851511808_Mysskin-direct-new-movie_SECVPF‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் தற்போது விஷால் கதாநாயகனாக நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமாக மைத்ரேயா என்ற புதுமுகம் நடிக்கும் படத்தை மிஷ்கின் இயக்கவிருக்கிறார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் ரகுநந்தனின் மகனாவார்.

மைத்ரேயா லண்டனில் எம்.பி.ஏ., பட்டம் படித்து, மும்பையில் உள்ள நடிப்பு கல்லூரியில் பயின்று, சினிமாவுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் கடந்த 2 வருடமாக முறையாக கற்றுள்ளாராம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பிரபல முன்னாள் கதாநாயகனும், குணச்சித்திர நடிகருமான ரவிச்சந்திரனின் பேத்தி தானியா கதாநாயகியாக அறிமுகமாகிறார். விஷால் நடிப்பில் உருவாகிவரும் ‘துப்பறிவாளன்’ படம் முடிந்தவுடன் இப்படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries