விஜய் பிறந்தாள்: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

1466576612-2206தமிழ் திரையுலகில் முன்னனி நடிகராக திகழ்பவர் விஜய். ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டவர் இவர் என்பது தெரிந்ததே. இந்நிலையில் நடிகர் விஜய் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தியும், அன்னதானம் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய்யின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் மட்டுமின்றி முக்கிய நபர்களும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய் மக்கள் நலப் பணி மன்றம் மூலம் பல்வேறு உதவிகளும் வழங்கப்படுகிறது.

தெறி வெற்றிக்குபின் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அரங்கில் தனது பிறந்தநாளை விஜய் எளிமையாக கொண்டாடினார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries