அஜித்துக்கு வில்லன் யார்?

201606231814061212_who-is-Ajith-villain_SECVPF‘வேதாளம்’ படத்தை அடுத்து அஜித் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இப்படத்தில் கதாநாயகி தேர்வை விட வில்லன் தேர்வு மிகவும் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் மிகவும் ஸ்டைலிஷான வில்லன் வேடம் இருக்கிறதாம். முதலில் அந்த கேரக்டரில் சசிகுமார் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில், அர்ஜூன் வில்லன் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர அரவிந்த் சாமியிடமும் பேச்சுவார்த்த நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அஜித்-அர்ஜூன் இருவரும் ‘மங்காத்தா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஆகையால், அர்ஜூன் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் வில்லன் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries