ரசிகர்களுக்கு இரட்டை விருந்து தரும் சந்தானம்

201606231619088406_Santhanam-will-give-fans-a-double-treat_SECVPFதமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சந்தானம், தற்போது ‘தில்லுக்கு துட்டு’, ‘சர்வம் சுந்தரம்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில், ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நாளை இப்படத்தின் பாடல்களையும், டிரைலரையும் படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். சந்தானத்தின் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இது இரட்டை விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

திகில் மற்றும் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தை ‘லொள்ளு சபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கியுள்ளார். சந்தானம், ஷான்யா, கருணாஸ், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், சிங்கமுத்து உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. எஸ்.தமன் இசையமைத்துள்ளர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online