கொளஞ்சி டீசரை வெளியிடும் சிம்பு

201606231455410923_Simbu-launcher-kolanji-movie-teaser_SECVPFசமுத்திரகனி, சங்கவி நடிப்பில் ‘மூடர்கூடம்’ நவீன் இயக்கும் புதிய படம் ‘கொளஞ்சி’. இப்படத்தில் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நாசத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ‘கொளஞ்சி’ என்ற 13-வது சிறுவனை சுற்றி நடந்த உண்மை கதையை தழுவலாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

சிறுவனை பற்றிய கதை என்றாலும், இப்படம் சிறுவர் படமில்லை என்று படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், ‘கொளஞ்சி’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, நாளை மாலை 4 மணிக்கு இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளனர். இந்த டீசரை நடிகர் சிம்பு வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த செய்தியை இப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான நவீன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online