ஜி.வி.பிரகாஷுக்கு குத்துப்பாட்டு பாடிய சிம்பு

201606231031435324_Simbu-sings-kuthu-song-in-gv-prakash-film_SECVPFஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ் தற்போது ‘புருஸ்லீ’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜ் என்பவர் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்காக நடிகர் சிம்பு ஒரு குத்துப்பாடலை பாடியுள்ளார்.

சமீபகாலமாக சிம்பு பாடும் பாடல்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வரிசையில் இந்த குத்துப்பாடலும் படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

‘புருஸ்லீ’ என்று இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவின் பெயரை வைத்திருந்தாலும், இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக உருவாகி வருகிறது. பாலசரவணன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் இப்படத்தின் காமெடிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online