கற்பழிப்பு பற்றி விமர்சனம்: வருத்தம் தெரிவிக்க சல்மான்கான் மறுப்பு

201606231313088623_About-Rape-Review-Salman-Khan-refuses-to-apologize_SECVPFநடிகர் சல்மான்கான் மல்யுத்ததை மையப்படுத்திய ‘சுல்தான்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர் இந்த பயிற்சியின் போது கற்பழிக்கப்பட்ட பெண் அடைந்த வேதனையை உணர்ந்ததாக அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளன. மராட்டிய மாநில பெண்கள் ஆணையம் சல்மான்கான் வருகிற 29–ந்தேதி பகல் 2 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சல்மான்கானுக்கு எதிராக போராட்டம் வலுவடைந்ததை தொடர்ந்து அவரது தந்தையும், சினிமா கதாசிரியருமான சலீம்கான் மன்னிப்பு கேட்டார். சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கான் கூறும்போது, “சல்மான்கான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. கழுதைபோல் உழைக் கிறேன் என்று சொல்வோம் அல்லவா? அதுபோல் சொல்லி இருக்கிறார்” என்றார்.

இதற்கிடையே மும்பை விமான நிலையம் வந்த சல்மான்கானிடம் நிருபர்கள் இதுகுறித்து கருத்து கேட்க முயன்றனர். ஆனால் சல்மான்கான் மன்னிப்பு கேட்கவோ, கருத்து கூறவோ மறுத்து விட்டார். எந்த பதிலும கூறாமல் சென்று விட்டார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online