கேரம் விளையாட கற்றுக் கொள்ளும் தனுஷ்

201606242206123649_Dhanush-learned-to-Carrom-board_SECVPFதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஜெயில் செட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனுஷ் திடீரென கேரம் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ‘வடசென்னை’ படத்தில் தனுஷ் கேரம் போர்டு விளையாடுவது போன்ற காட்சிகள் சில வருகின்றதாம். அதற்காக கேரம் பயிற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும், அவருக்கு கேரம் விளையாட்டு வீரர் ஒருவர் பயிற்சி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். லைக்கா புரடொக்ஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்கின்றன. இந்த படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online