தங்கைக்காக கதை கேட்கும் ஷாலினி

201606242109060445_Shalini-hear-story-for-sister_SECVPFசினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர் அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெயர் பெற்றார். ‘அமர்க்களம்’ படத்தின் போது அஜித்தை காதலித்து திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து விலகினார்.

தற்போது ஷாலினியின் தங்கை ஷாமிலி கதாநாயகியாக நடித்து வருகிறார். விக்ரம் பிரபுவுடன் ஷாமிலி நடித்த ‘வீரசிவாஜி’ படம் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. டிராவல் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஷாமிலி அடுத்ததாக நடிக்க இருக்கும் படங்களின் கதையை ஷாலினி கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் மூன்று இயக்குனர்களிடம் ஷாலினி கதை கேட்டு இருப்பதாகவும் விரைவில் இந்த மூன்றில் ஒன்றை அவர் தேர்வு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online