திரிஷாவின் நாயகி ரிலீஸ் தேதி

201606242032510792_Trisha-Nayaki-Release-Date-is-here_SECVPFதற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவரது நடிப்பில் ‘கொடி’ மற்றும் ‘நாயகி’ படங்கள் உருவாகி உள்ளன. இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதில் ‘நாயகி’ திகில் படமாக உருவாகியிருக்கிறது. இதில் இரண்டு வேடங்களில் திரிஷா நடித்துள்ளார்.

இந்நிலையில் ‘நாயகி’ படத்தை வரும் ரம்ஜான் திருநாளன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழில் வெளிவந்த கிட்டத்தட்ட அனைத்து பேய் படங்களையும் ரிலீஸ் செய்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ளது.

திரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயாரித்துள்ள இந்த படத்தில் திரிஷா, சுஷ்மாராஜ், கணேஷ் வெங்கட்ராமன், மனோபாலா, கோவை சரளா, பிரம்மானந்தம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது. கோவி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries