நிவின் பாலி படத்தை தயாரிக்கும் ரெமோ பட தயாரிப்பாளர்

201606241548192265_Remo-movie-producer-next-nivin-pauly-movie_SECVPFசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘ரெமோ’ படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் ஆர்.டி.ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படம் ஒன்றையும் இந்த நிறுவனம்தான் தயாரிக்கவிருக்கிறது.

இந்நிலையில், தமிழில் ‘நேரம்’, மலையாளத்தில் ‘பிரேமம்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த நிவின்பாலி நடிப்பில் உருவாகும் நேரடி தமிழ் படம் ஒன்றையும் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை ‘பட்டாளம்’ என்ற படத்தை இயக்கிய ரோஹன் கிருஷ்ணன், பிரபு ராதாகிருஷ்ணன் என்ற பெயர் மாற்றத்துடன் இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கான கதை தயார் செய்யும் பணி தற்போது பிசியாக நடைபெற்று வருகிறது. அது முடிந்தபிறகு படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online