சிம்பு-யுவன் கூட்டணியில் 9 பாடல்கள்

201606232217378413_Simbu-Yuvan-team-9-Songs-in-AAA-movie_SECVPFசிம்பு நடிப்பில் ‘இது நம்ம ஆளு’ படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தை அடுத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த தலைப்பை சுருக்கமாக ‘AAA’ என்று அழைத்து வருகிறார்கள். இப்படத்தை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார். சிம்பு-யுவன் கூட்டணியில் இந்த படத்தில் 9 பாடல்கள் இருக்க போவதாக படத்தின் இயக்குனர் ஆதிக் அறிவித்திருக்கிறார். மேலும் இந்த பாடல்கள் தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டராக மாறும் என்றும் குறிப்பாக இப்படத்தின் பிஜீம் சிறப்பாக அமையும் என்றும் ஆதிக் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே சிம்பு-யுவன் கூட்டணியில் ‘மன்மதன்’, ‘வல்லவன்’ ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. அதேபோல், இந்த படத்தின் பாடல்கள் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக மூன்று முன்னணி நடிகைகள் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries