ரசிகர்களை கவர்ந்த ரெமோ பர்ஸ்ட் லுக்

remo-movie-first-lookசிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ரெமோ’. பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ள இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், அனிருத் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் கைகோர்த்து பணியாற்றி உள்ளனர். அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் ஹாலிவுட் மேக்கப் மேன் சீன் பூட்ஸும் பணியாற்றியுள்ளார்.

மேலும், கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் மூலம் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் சங்கர் கலந்துக் கொண்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

சிவகார்த்திகேயன் நர்ஸ் வேடத்தில் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வரவேற்பு பெற்று வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries