டிமான்ட்டி காலனி இயக்குனர் படத்தில் அதர்வா

201606251420261099_Atharva-next-movie-direct-by-demonte-colony-director_SECVPFஅருள்நிதி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘டிமான்ட்டி காலனி’. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். இந்த திகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார்.

இப்படத்தில் அதர்வா நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகையை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. இப்படமும் திகில் படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டது. படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

அதர்வா தற்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கி வரும் ‘செம போத ஆகாத’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படம் முடிந்த பிறகு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்க இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries