பிறந்த நாளில் மியூசிக் ஆல்பம் வெளியிடும் ஹரிஷ் கல்யாண்

201606251401567838_Harish-Kalyan-Release-Music-Album-on-birthday_SECVPF‘பொறியாளன்’ ‘வில்அம்பு’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஹரிஷ் கல்யாண். இவர் ‘ஐ எம் சிங்கிள்’ என்ற மியூசிக் ஆல்பத்தை உருவாகியுள்ளார். அவரே எழுதி பாடியுள்ள இந்த பாடலுக்கு எல்.வி.முத்துகுமார் இசையமைத்துள்ளார்.

இவர் மறைந்த பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதன் மகன் ஆவார். மேலும் சிலம்பரசனின் சித்தி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பெண்ணை நினைத்து பாடும் ஒரு இளைஞனின் காதல்வரிகள் தான் பாடலின் கரு.

‘ஐ எம் சிங்கிள்… ஐ எம் ரெடி டு மிங்கிள்… தினமும் உன்னெ நெனெச்சேன… என்று எழுதியுள்ள ஹீரோ ஹரிஷ் கல்யாண் சொல்லும்போது…

‘7-வயதிலிருந்து நானும் மியூசிக் கத்துகிட்டேன். யுவன் போன்ற பல பிரபல இசையமைப்பாளரின் குருவான சதா மாஸ்டரிம்தான் நானும் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அந்த இசை ஆர்வத்தில்தான் இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளேன்.

இதை நண்பர் எல்.வி.முத்துகுமார் இசையமைத்து கொடுத்துள்ளார். வருகிற 29-ம் தேதி எனது பிறந்த நாளில் ‘யூ டியூபில்’ வெளியிட திட்டமிட்டுள்ளேன்’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online