இண்டிபெண்டன்ஸ் டே ரிசர்ஜென்ஸ் – திரை விமர்சனம்

maxresdefault1996ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினம் மட்டுமல்ல, உலகத்தை அழிக்க நினைத்த வேற்று கிரகவாசிகளின் தாக்குதலை அமெரிக்கா முறியடித்த தினம். சரியாக 20 வருடங்கள் கழித்து, மீண்டும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயாராகிறது அமெரிக்கா.

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சுதந்திர தின உரையாற்றுவதற்காக தயாராகி வருகிறார் தற்போதைய ஜனாதிபதியான சீலா வார்டு.

இந்த சூழ்நிலையில், நீண்ட வருடங்களாக உடல்நிலை சரியில்லாமலிருந்த பழைய ஜனாதிபதி பில் புல்மேனுக்கு மீண்டும் வேற்று கிரகவாசிகளின் தாக்குதல் நடக்கப்போவதாக உணர்கிறார்.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் 3000 மைல் சுற்றளவு கொண்ட மிகப் பிரம்மாண்டமான விண்கலம் ஒன்று, உலகின் பாதுகாப்பு வளையத்தையும் மீறி தரையிறங்கி, பூமியின் மையப்பகுதியை துளையிடத் துவங்குகிறது. இதனால் இரண்டு மணி நேரத்தில் மொத்த உலகமும் அழியப்போகிறது என்ற அபாயத்தில் மக்கள் பரிதவிக்கிறார்கள்.

இறுதியில் இந்த பேராபத்தை அமெரிக்க ராணுவம் எப்படி முறியடிக்கிறது? இந்த முறை வேற்று கிரகவாசிகளின் தாக்குதல்கள் எப்படிப்பட்டதாக இருந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

இப்படத்தில் பில் புல்மேன், ஜெப் கேல்டுப்ளம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்திலும் நடித்த இவர்களுடன் லியம் ஹெம்ஸ்வொர்த் நடித்திருக்கிறார். கதையின் விறுவிறுப்புக்கு ஏற்க கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள், மலைக்க வைக்கும் போர்க்கருவிகள், சாகச சண்டைக்காட்சிகள், மிரளவைக்கும் ஒளிப்பதிவு, பிரமிக்க வைக்கும் பின்னணி இசை என டெக்னிக்கலாக மிகப்பெரிய உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள்.

ஆனால், முதல் பாகத்திலிருந்த ஒரு சுவாரஸ்யமான கதையோ, பரபரப்பான திரைக்கதையோ, நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகளோ இப்படத்தில் இல்லை. வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டும் நிறைந்த படமாகவே இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

முதல் பாகம் வெளிவந்தபோது ‘ஏலியன்ஸ்கள்’ ரசிகர்களுக்கு புது விஷயம். ஆனால், அதன்பிறகு இதுபோன்ற பல படங்களை ரசிகர்கள் பார்த்துவிட்டதும்கூட, இப்படத்தின்மீது பெரிய ஈர்ப்பு வராததற்கு காரணமாக இருக்கலாம்.

ஹெரால்டு கிளோசர், தாமஸ் வான்கர் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்திற்கு மார்கஸ் போர்டெரர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர்களுடைய பங்களிப்பு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ‘இண்டிபெண்டன்ஸ் டே 2: எழுச்சி அடைதல்’ சுவாரஸ்யம் குறைவு.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries