இவன் யாரென்று தெரிகிறதா டிரைலரை வெளியிட்ட விஷால்

201606261829166649_Vishal-Launches-ivan-yarendru-therikiratha-trailer_SECVPF‘இவன் யாரென்று தெரிகிறதா’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. ரொமான்ஸ் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நடிகர் விஷ்ணு, ‘வெற்றிவேல்’ புகழ் வர்ஷா மற்றும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் கே.பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், பகவதி பெருமாள், ராமச்சந்திரன், அர்ஜுனன், ராஜ்குமார் உட்பட மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டிரைலரை விஷால் வெளியிட்டார்.

டிரைலரை வெளியிட்ட பின்பு விஷால் பேசியதாவது, ‘‘இந்த டிரைலர் முழுக்க முழுக்க வண்ணமயமாகவும், காமெடி கலாட்டாவாகவும் உருவாகியிருப்பதை என்னால் உணரமுடிகிறது. ‘இவன் யாரென்று தெரிகிறதா’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!’’ என்றார்.

இயக்குனர் சுசீந்திரனிடம் அசோசியேட்டாக பணிபுரிந்த எஸ்.டி.சுரேஷ்குமார் இயக்கியுள்ள இப்படத்தை, ஓன் சினிமாஸ் நிறுவனம் சார்பாக டி.அசோக்குமார் தயாரித்துள்ளார். ‘மஞ்சப்பை’ புகழ் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries