பள்ளி மாணவியாக நடிக்கும் பிரியா ஆனந்த்

201606261504302202_Priya-Anand-School-student-in-Muthuramalingam-movie_SECVPFகார்த்தி, கவுதம் கார்த்தி, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘முத்துராமலிங்கம்’. இப்படத்தை ராஜதுரை என்பவர் இயக்கி வருகிறார். இளையராஜா இசையமைத்து வருகிறார். குளோபல் மீடியா நிறுவனம் இப்படத்தை பிரம்மண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் பிரியா ஆனந்த் பள்ளி மாணவியாக நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பள்ளி சீருடை அணிந்து பிரியா ஆனந்த் மாணவிகளுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளதால் இந்த தகவல் உண்மை என்றே கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தை பற்றிய மேலும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக இளையராஜா இசையில் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார்.

பஞ்சு அருணாச்சலம் இந்த பாடலின் வரிகளை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவும் பஞ்சு அருணாச்சலமும் இப்படத்தின் மூலம் இணைகிறார்கள் என்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries