வீரசிவாஜி டீசரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

ClyHubEUgAAfXAQவிக்ரம் பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில் ‘வீரசிவாஜி’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நாயகியாக ஷாம்லி நடிக்கிறார். மேலும், ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

டீசரை பார்த்த ஏ.ஆர்.முருகதாஸ் டீசர் அருமையாக உள்ளது எனவும், நிச்சயமாக இப்படம் நிச்சயமாக வெற்றியடையும் என படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

விரைவில் இப்படத்தின் இசையை வெளியிடவுள்ளனர். ‘வீரசிவாஜி’ படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார்.

இவர் ஏற்கெனவே ஜெயம் ரவி-ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்தவர். தற்போது விஷால், வடிவேலு, தமன்னா நடிப்பில் உருவாகும் ‘கத்தி சண்டை’ படத்தையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online