விக்ரம் மகளுக்கு ஜுலையில் திருமண நிச்சயதார்த்தம்

Vikram’s-daughter-to-get-engagedதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் விக்ரமுக்கு துருவ் என்ற மகனும் அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் அக்ஷிதாவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், கவின்கேர் ரங்கநாதன் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த மனு ரஞ்சித்திற்கும் வருகிற ஜுலை மாதம் 10-ந் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற போவதாக விக்ரமுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

தற்போது விக்ரம் குடும்பத்தார் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளதாகவும், நிச்சயதார்த்த விழாவில் விக்ரம் மற்றும் மாப்பிள்ளை குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள மிகப்பெரிய நட்சத்திர ஓட்டலில் இந்த விழாவை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமணம் அடுத்த ஆண்டு இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரையில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. விக்ரம் தற்போது ‘இருமுகன்’ படப்பிடிப்பிடில் பிசியாக இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online