கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண் சல்மான்கானிடம் ரூ.10 கோடி கேட்டு வழக்கு

201606271643414817_Rs-10-crore-to-Salman-Khan-heard-torture-girl-victim-case_SECVPFபிரபல இந்தி நடிகர் சல்மான்கான். சர்ச்சைகளில் சிக்கி கொள்வது இவரது வாடிக்கையாகும். மான்வேட்டையாடியது, குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது உள்பட பல்வேறு விவகாரங்களில் சிக்கி இருந்தார்.
இந்த நிலையில் சல்மான் கான் கற்பழிப்பு குறித்த பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சல்மான்கான் நடித்த சுல்தான் படம் கடந்த 6–ந்தேதி வெளியானது.

இந்த படம் குறித்து பேட்டி அளித்த அவர் மல்யுத்தம் தொடர்புடைய காட்சிகளில் நடித்தபோது கற்பழிக்கப்பட்ட பெண் போன்று உணர்ந்தேன் என்று தெரிவித்தார்.

சல்மான்கானின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் கெடு விதித்துள்ளது. சல்மான் கானின் இந்த கருத்துக்கு அவரது தந்தை மன்னிப்பு கேட்டு இருந்தார்.

இதற்கிடையே சல்மான்கானிடம் ரூ.10 கோடி கேட்டு கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர் 10 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவரது தந்தை தற்கொலை செய்தார். குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்ககோரி அந்த பெண் பஞ்சாப் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

இந்த ரேஷ்மாதான் தற்போது சல்மான்கானிடம் ரூ.10 கோடி கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக மும்பை பாந்தாராவில் உள்ள அவரது வீட்டுக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அந்த பெண்ணின் வக்கீல் கூறியதாவது:–

கற்பழிப்புக்கு உள்ளாகி இருந்த அந்த பெண் சல்மான் கானின் கருத்தால் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். கற்பழிப்பு பற்றிய இந்த கருத்தால் அவர் மனரீதியாகவும்,உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் ரூ.10 கோடி கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online