ஸ்ருதிஹாசனின் அடுத்த படம் ஆகஸ்ட் 12-ல் ரிலீஸ்

201606281930238661_Shruti-Haasan-next-film-release-on-August-12_SECVPFஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக ‘வேதாளம்’ படம் வெளியானது. அஜித் கதாநாயகனாக நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்து இவர் தற்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சிங்கம் 3’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தை தவிர மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் இவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கிய கேரக்டரான மலர் டீச்சர் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

நாகசைதன்யா, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை சாண்டூ மொண்டெட்டி இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களை வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படத்தை சுதந்திர தின விடுமுறை வாரத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

மலையாளத்தைப் போலவே தெலுங்கிலும் இந்த படம் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online