கபாலி ரிலீஸ் தேதி மீண்டும் மாறுகிறதா?

201606281831360786_Kabali-release-date-will-change_SECVPFரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கபாலி’. ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் முதலில் ஜூலை 1ஆம் தேதி வெளிவரும் என்று கூறப்பட்டது.

ஆனால் டப்பிங் பணிகளின் தாமதம் காரணமாக ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. தற்போது மேலும் ஒரு வாரம் ‘கபாலி’ தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 22 என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த படத்தின் வெளிநாட்டு உரிமைகளை பெற்ற விநியோகிஸ்தர்களும் இதை மறுக்கவில்லை. எனவே ஒருசில காரணங்களால் ‘கபாலி’ ஒரு வாரம் தள்ளிப்போகவுள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் ஜூலை 22ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஜூலை 1ஆம் தேதியே கபாலி ரஜினியை திரையில் காணலாம் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஜூலை 15-ல் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போவதால் ரசிகர்கள் இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries