தில்லுக்கு துட்டு படத்துக்கு தடை கேட்டு வழக்கு: சந்தானம் பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு

201606281806358994_dhilluku-dhuddu-ban-case-Court-summons-Santhanam-to-file_SECVPF‘பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மஸ்தான் சர்பூதீன். இவர், சென்னை 14வது சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் நிறுவனத்தின் சார்பில், ‘ஆவி பறக்க ஒரு கதை’ என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க முடிவு செய்தோம். இந்த படத்தின் இயக்குனராக ராம்பாலா என்பவர் நியமிக்கப்பட்டார். அதற்காக ரூ.11 லட்சம் சம்பளம் பேசி, ரூ.3 லட்சம் அவருக்கு முன்தொகையும் கொடுக்கப்பட்டது.

இந்த படத்தின் கதை விவாதம் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் முதல் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடந்தது. இதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்தேன்.

இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சிவா, கதாநாயகியாக நடிகை நந்திதா ஆகியோரை தேர்வு செய்து, அவர்களுக்கும் முன்தொகையாக பல லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த படத்தின் தலைப்பை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் கடந்த மார்ச் 12ந் தேதி பதிவு செய்துள்ளேன்.

இந்த நிலையில், நடிகர் சந்தானத்துடன், இயக்குனர் ராம்பாலா கைகோர்த்து, என்னுடைய ‘ஆவி பறக்க ஒரு கதை’ படத்தின் கதையை, ‘தில்லுக்கு துட்டு’ என்ற தலைப்பில் திரைப்படமாக எடுத்துள்ளனர். இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தை விரைவில் வெளியிடவும் உள்ளனர். இதுகுறித்து நடிகர் சந்தானத்திடம் பேசியபோது, ‘உன்னால் என்ன செய்ய முடியுமோ? அதை செய்’ என்று கூறியது மட்டுமல்லாமல், என்னை மிரட்டவும் செய்தார்.

எனவே, இந்த தில்லுக்கு துட்டு என்ற படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த வழக்கு 14வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி அப்துல்மாலிக் முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ஆனந்தன், நடிகர் சந்தானம் சார்பில் வக்கீல் நந்தகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘இருதரப்பினரும் தங்களிடம் உள்ள ஆவண ஆதாரங்களை பரிமாற்றிக் கொண்டு, பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்.

அதன்பின்னர் இருதரப்பினரும் பதில் மனுக்களை தாக்கல் செய்யவேண்டும். வழக்கு விசாரணையை ஜூலை 6ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று இடைக்கால மனு மீதான தீர்ப்பு பிறப்பிக்கப்படும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online