ரெமோவுடன் இணைந்த இருமுகன்

201606281304336103_Irumugan-joint-to-Remo_SECVPFசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரெமோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் லோகோ சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, அனிருத், சீன் பூட் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் கைகோர்த்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘செஞ்சிட்டாளே’ என்ற சிங்கிள் பாடலை ஜூன் 30-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் ‘சைமா’ விருது வழங்கும் விழாவில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், விக்ரம்-நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘இருமுகன்’ படத்தின் டீசரையும், தெலுங்கு தலைப்பையும் சைமா விருது வழங்கும் விழாவில் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், சரண்யா பொன்வண்ணன், ஆன்சன் பால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். ‘இருமுகன்’ படத்தை ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். சிபு தமீன்ஸ் படத்தை தயாரித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries