கபாலி படம் முழுவதும் ரஜினி இளமையாக வருகிறார்: ரஞ்சித் தகவல்

201606291740193122_Throughout-kabali-film-Rajini-is-young-Ranjith-Information_SECVPFகபாலி பட டீசர் மற்றும் விளம்பரங்களில் ரஜினி முதுமை தோற்றத்தில் வருகிறார். இதனால் அவர் பெரும்பாலும் முதிய தோற்றத்தில் நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஐதராபாத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் போது ‘கபாலி’ படம் பற்றி இயக்குனர் பா.ரஞ்சித் கூறிய தகவல்கள்…

“கபாலியில் ரஜினி வயதான தோற்றத்தில் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே வருகிறார். மீதி நேரங்களில் 1980–ல் ரஜினி எப்படி இருந்தாரோ அது போன்ற இளமை தோற்றத்தில் வருகிறார்.

‘கபாலி’ என்று சொன்னாலே ஒரு ரவுடி பெயரைப் போன்ற தோற்றம் இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் கபாலி என்ற பெயரை மனதில் பதியும் நல்ல பெயராக பயன்படுத்தி இருக்கிறேன்.

மலேசியாவில் உள்ள இந்திய தொழிலாளர்கள் படும் கஷ்டங்களையும், அவர்களை அதில் இருந்து ரஜினி எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை. அந்த மக்களின் நலனுக்காக சாதாரண மனிதனான அவர், டான் ஆக மாறுகிறார் என்பதை உருவாக்கி விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறோம்.

ரஜினி, மலேசியா குடிமகனாக நடித்திருக்கிறார். ‘முள்ளும் மலரும்’ படம் தான் இதுவரை ரஜினி நடித்த படங்களிலேயே அதிகம் பேசப்பட்ட படம். ஆனால், கபாலி படத்தில் அவர் நடித்துள்ள விதம் அந்தப்படத்தையும் மிஞ்சும் விதத்தில் இருக்கும்.”

இந்த தகவல்கள் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries