நட்சத்திர ஜன்னலில் படத்தை பாராட்டிய சென்சார் அதிகாரிகள்

201606291610525071_sensor-Officers-praising-natchathira-jannalil-movie_SECVPFஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துளள படம் ‘நட்சத்திர ஜன்னலில்’ .

அதில் அபிஷேக் குமரன் நாயகனாகவும் அனுபிரியா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். ராஜசேகர் ரத்னம் ஒளிப்பதிவு செய்து உதயன் இசை அமைத்துள்ள இந்த படத்தை எஸ்.டி. முத்துக்குமரன் தயாரித்துள்ளார்.

ஜெயமுருகேசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். தற்போது இந்த படம் தணிக்கை முடிந்துள்ளது. இதுபற்றி கூறிய இயக்குனர் “இந்த படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கிய சென்சார் அதிகாரிகள், மாணவ மாணவியர் அனைவரும் தங்கள் குடும்பத்தாருடன் அவசியம் பார்க்கவேண்டிய அற்புதமான படம் என்று பாராட்டி உள்ளனர்.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வினை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online