குயின் ரீமேக்கில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை

201606291336185457_Trisha-act-in-queeen-remake_SECVPFஇந்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டு கங்கனா ரணாவத் நடிப்பில் வெளிவந்த படம் ‘குயின்’. இப்படத்தை விகாஸ் பாகல் என்பவர் இயக்கியிருந்தார். அனுராக் காஷ்யப் மற்றும் விக்ரமாதித்யா என இரு பெரிய தயாரிப்பாளர்கள் இப்படத்தை தயாரித்திருந்தனர். விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தை தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது.

தென்னிந்திய மொழிகளில் ரீமேக் உரிமைகளை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியிருந்தார். இதையடுத்து, இப்படத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு.

தற்போது, குயின் ரீமேக்கில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்படுகிறது. இப்படத்திற்காக தொடர்ச்சியாக தேதிகள் கேட்பதால், இதுகுறித்த ஆலோசனையில் இருக்கிறாராம் திரிஷா.

திரிஷா நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘அரண்மனை-2’ படம் பெரியளவில் வெற்றியடைவில்லை. இருப்பினும், ‘நாயகி’ ‘மோகினி’ ஆகிய கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries