மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்த ஸ்ரீதிவ்யா

201606302113075899_Again-sri-divya-joins-with-sivakarthikeyan_SECVPFசிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’, ‘காக்கி சட்டை’, ஆகிய படங்களில் ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீதிவ்யா இணைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ரெமோ’. இதில் கீர்த்திசுரேஷ் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீ திவ்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் நர்ஸ் வேடத்தில் நடித்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. தற்போது டப்பிங் உள்ளிட்ட படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online