ஜீவாவின் கவலை வேண்டாம் ரிலீஸ் தேதி

201606301906126957_Jiiva-kavalai-vendam-movie-date-is-here_SECVPFஜீவா நடிப்பில் கடைசியாக ‘போக்கிரி ராஜா’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவருடைய நடிப்பில் அடுத்ததாக ‘கவலை வேண்டாம்’ என்ற படம் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் பாபிசிம்ஹா, சுருதி ராமகிருஷ்ணன், சுனைனா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தை ‘யாமிருக்க பயமே’ டி.கே இயக்கி வருகிறார். எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பை முடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தை கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நயன்தாராவுடன் ஜீவா நடித்துள்ள ‘திருநாள்’ படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries