மோகன்லால் கையில் கபாலி

201606301615440620_rajinikanth-kabali-movie-Mohanlal-hand_SECVPFரஜினி நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் ‘கபாலி’. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது 22ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப்போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ‘கபாலி’-யில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்திருக்கிறார். படத்தில் அல்ல, ‘கபாலி’ படத்தின் வியாபாரத்தில் இணைந்திருக்கிறார். அதாவது ‘கபாலி’ படத்தை கேரளாவில் மோகன்லால் வெளியிட இருக்கிறார். மோகன்லாலின் மேக்ஸ் லேப் நிறுவனம், ரூ.8.5 கோடிக்கு படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது.

இந்த தகவலை மோகன்லாலின் மேலாளர் ஆண்டனி, தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய தொகைக்கு கேரளாவில் இதுவரை வேறு எந்தவொரு நேரடி தமிழ் படமும் வியாபாரம் ஆனதில்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘தெறி’ படத்தின் கேரள விநியோக உரிமை 5.6 கோடி ரூபாய்க்கு விலை போனதாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries