கபாலி இனி ஆகாயத்தில் பறக்க இருக்கிறார்

201606300827424317_Kabali-takes-off-in-style_SECVPFரஜினி நடிப்பில் நாளுக்கு நாள் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம் ‘கபாலி’. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர், பாடல்கள் என அனைத்தும் சரித்திர சாதனை படைத்து வரும் நிலையில், இப்படத்திற்கு இன்னொரு மணிமகுடம் வைத்தாற்போன்று ஏர்-ஏசியா விமான நிறுவனமும் கைகோர்த்துள்ளது படத்தின் மீது மேலும் அதிக தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் ‘கபாலி’ படத்தின் ஏர்-லைன் பார்ட்னராக இணைந்த ஏர்-ஏசியா விமான நிறுவனம், தங்கள் விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வந்தது.

அதேபோல், புதிய புதிய திட்டங்களையும் அறிவித்து வந்தது. இந்நிலையில், ஏர்-ஏசியா நிறுவனத்தின் விமானம் ஒன்றில் ‘கபாலி’ படத்தின் விளம்பரத்தை அச்சடித்துள்ளனர்.

கடல் கடந்தும் ‘கபாலி’யின் புகழ் பரவி வரும் நிலையில், தற்போது ஆகாயத்திலும் ‘கபாலி’ புகழை நிலைநாட்டும் வகையில் ஏர்-ஏசியா நிறுவனம் இந்த படத்தின் விளம்பரங்களை தங்களது விமானத்தில் அச்சடித்துள்ளது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

5415002F-E3A2-43D5-BA32-E4BF4B19DCF4_L_styvpf ‘கபாலி’ விளம்பரம் அச்சடிக்கப்பட்டுள்ள விமானத்தின் புகைப்படங்களை ஏர்-ஏசியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries