கபாலியால் மாறிவரும் புதுச்சேரி மாநிலம்

201606301147422560_Pudhuchery-state-change-for-Kabali_SECVPFரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் ஜுலை மாதம் வெளியாகவுள்ளது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். விரைவில் தணிக்கைக்கு செல்லவிருக்கும் இப்படத்திற்கான புரோமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் புதிய துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி ரஜினியை புதுச்சேரி மாநிலத்தின் ‘சுத்தமான செழிப்புமிக்க புதுச்சேரி’ திட்டத்துக்கு விளம்பர தூதுவராக வர வலியுறுத்தப்போவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “புதுச்சேரி மாநிலத்தில் பொதுசேவையை முறையாக பயன்படுத்துபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ‘கபாலி‘ படத்தின் டிக்கெட்டுகளை புதுச்சேரி கலெக்டர் வழங்கி வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இதனால், ரஜினியை ‘செழிப்புமிக்க புதுச்சேரி’ திட்டத்துக்கு விளம்பர தூதுவராக வருமாறு அவரை நான் வலியுறுத்தப் போகிறேன். சுத்தமான, செழிப்பான புதுச்சேரி திட்டத்துக்கு ரஜினி விளம்பர தூதராக வந்தால் பழைய பழக்கவழக்கங்கள் மாறும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online