சுந்தர்.சியுடன் முதல் முறையாக இணையும் ஏ.ஆர்.ரகுமான்

201607011916201206_AR-Rahman-first-time-joins-with-Sundar-c_SECVPFபல வெற்றிப் படங்களை இயக்கிய சுந்தர்.சி அடுத்ததாக மிகப்பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி ரூபாய்க்கும் மேல் என்று கூறப்படுகிறது. ஸ்ரீதேனாண்டாள் மூவிஸ் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படம் இந்நிறுவனத்தின் 100வது படம் ஆகும்.

இந்நிலையில் இந்த படத்தில் பணிபுரியும் அனைவருமே இந்திய அளவில் பிரபலமானவர்களாக இருக்க வேண்டும் என்பதில் சுந்தர்.சியும் தயாரிப்பு நிறுவனமும் உறுதியாக உள்ளது. அதன்படி இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் பணிபுரிவார் என்று கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுவரை சுந்தர்.சி 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இதுவரை இவருடைய படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தது இல்லை. முதல் முறையாக இந்த புதிய படம் மூலம் இருவரும் இணைந்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளரை அடுத்து இந்திய அளவில் பிரபலமான நாயகன், நாயகி ஆகியோரின் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries