நீண்ட நாள் கனவு நிறைவேறி விட்டது: அக்‌ஷய்குமார்

201607011735416856_long-dream-was-fulfilled-Akshay-Kumar_SECVPF‘2.0’ படத்தில் ரஜினியுடன் வில்லனாக நடிப்பவர் இந்தி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் ரஜினியை அவ்வப்போது புகழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அக்‌ஷய்குமார் பேசும் போது….

“எனக்கு ரஜினியை பல வருடங்களாக தெரியும். அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இப்போது தான் அது நிறைவேறி இருக்கிறது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ரஜினியை என்னிடம் அறிமுகப்படுத்திய போது, இங்கு அவர் தான் சூப்பர் ஸ்டார் என்றார்கள். இங்குமட்டுமல்ல, இந்தியா அளவில் அவர்தான் சூப்பர் ஸ்டார். சினிமாவில் மட்டுமல்ல உண்மையாகவும் அவர் சூப்பர் ஸ்டார். இப்போது அவரிடம் இருந்து நிறையகற்று வருகிறேன். இதற்கு முன்பு ஒரு சில இந்தி, படங்களின் சூட்டிங்குக்காக சென்னை வந்து இருக்கிறேன். இப்போது தான் அதிக நாட்கள் தங்கி இருக்கிறேன்.

சென்னை மட்டுமல்ல தென் இந்திய நகரங்களையும் எனக்கு பிடிக்கும். குறிப்பாக தென் இந்திய உணவுகளை எனக்கு மிகவும் பிடிக்கும். ‘2.0’ படத்துக்குப்பிறகு அடிக்கடி சென்னை வரும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries