குஷ்பு, நதியா போல் பெயர் வாங்க ஆசை: சாக்ஷி அகர்வால்

201607011702453422_Khushboo-Nadiya-like-name-Sakshi-Agarwal_SECVPFமாடல் அழகியாக இருந்து கன்னட நடிகையாகி தமிழுக்கு வந்தவர் சாக்ஷி அகர்வால். பெற்றோருக்கு பூர்வீகம் நைனிடால் என்றாலும் இவர் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான்.

‘திருட்டு விசிடி’ உள்பட சில படங்களில் நடித்த சாக்ஷி இப்போது ‘கககபோ’ படத்தில் நடித்திருக்கிறார். புதிய தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். படத்தில் நடிப்பது பற்றி கூறிய சாக்ஷி அகர்வால்….

“நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறேன்” என்றாலும் இப்போது நடித்துள்ள ‘கககபோ’ நல்ல காமெடி படம். எனது பாத்திரம் தான் படத்தின் முக்கிய கரு. என்னைக் சுற்றிதான் படம் நகரும். இது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. இந்த படம் தமிழ் ரசிகர்கள் இன்னும் அதிகமாக என்னை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

குடும்பத்துடன் பார்க்கக் கூடிய நல்ல கதையம்சம் கொண்ட படம் இது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு வேடம் எனக்கு கிடைத்திருப்பது நல்ல வாய்ப்பு. மிகவும் சந்தோ‌ஷமான வி‌ஷயம்.

இந்த படத்தில் பவர்ஸ்டார், சிங்கம்புலி, மதன்பாப் என்று பல காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ‘கககபோ’ படம் வந்த பிறகு அனைவரும் என்னை அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

குஷ்பு, நதியா இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களைப் போல நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் லட்சியம். கவர்ச்சி தேவை என்றாலும் நடிப்பு முக்கியம் என்பது என் கருத்து” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries