ஜோடியாக சைக்கிள் சவாரி செய்த சல்மான் கான் – ஷாருக்கான்

201607011339311460_Shah-Rukh-Salman-enjoy-bike-ride-together_SECVPFகடந்த ஆண்டுவரை எலியும் பூனையுமாக இருந்துவந்த பாலிவுட் நடிகர் சல்மான் கானும், ஷாருக்கானும் சல்மானின் வளர்ப்பு தங்கை திருமண விழாவில் மனக்கசப்புகளை மறந்து ஒன்றிணைந்தனர்.

சமீபத்தில், சுல்தான் படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட உடல் வலியை ‘கற்பழிக்கப்பட்ட பெண்’ என்ற உவமையுடன் ஒப்பிட்டுப் பேசிய சல்மானின் கருத்து தொடர்பான பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுத்துவிட்ட ஷாருக்கான், இன்று சல்மானுடன் ஜோடியாக சைக்கிள் சவாரி செய்யும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘சகோதரர்கள் இருவரும் சைக்கிளில்.., மாசு இல்லை. மைக்கேல் லால் சைக்கிள் லால் என்று சகோதரர் சொல்கிறார்’ என்று அந்த புகைப்படத்துக்கு ஷாருக்கான் அடிக்குறிப்பும் (கேப்ஷன்) எழுதியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries