வட சென்னை படத்தில் இருந்து சமந்தா விலகலா?

201606302206240858_Samantha-remove-from-dhanush-vadaChennai-film_SECVPFசமீபத்தில் இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் பெயரை திருமணம் செய்து கொள்ளும்போது அறிவிப்பேன் என நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இதையடுத்தை அவர் யார் என்று பலரும் பேசி வந்த நிலையில், காதலிப்பது தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைத்தன்யா என செய்திகள் வெளியாகின.

ஹைதராபாத்தில் உள்ள பிளாட் ஒன்றின் பால்கனியில் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற வீடியோ ஒன்றும் சமீபத்தில் வெளியாகி பரபரப்பானது. இதனிடையே, நாக சைத்தன்யாவின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்டியதாகவும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில், தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தில் கதாநாயகியாக நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகி இருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கப்பட்டது. மூன்று பாகங்களாக இப்படம் தயாராகிறது. தற்போது சமந்தா இப்படத்தில் இருந்து விலகியதாக செய்திகள் உலா வருகின்றன.

திருமணத்துக்குப் பின்பு நடிப்புக்கு முழுக்கு போட முடிவு சமந்தா செய்துள்ளாராம். அதனால், வட சென்னை படத்தில் மற்ற பாகங்களில் நடிக்க முடியாமல் போக வாய்ப்புள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online