சல்மான் கானுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்: 8-ந் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு

201607010927560743_Salman-Khan-summoned-by-National-Women-Commission-order-8th_SECVPF‘சுல்தான்’ என்ற இந்தி படத்தின் சண்டை காட்சியில் நடித்தது பற்றி கருத்து தெரிவித்த நடிகர் சல்மான் கான், கற்பழிக்கப்பட்ட பெண்ணை போன்று தனக்கு உடல் அசதி ஏற்பட்டதாக கூறினார்.

அவர் இவ்வாறு கூறியது பெண்களை இழிவுபடுத்துவது போல் இருப்பதாக கூறி பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து, சல்மான் கான் சார்பில் அவரது தந்தை சலீம்கான் மன்னிப்பு கேட்டார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, விளக்கம் கேட்டு நடிகர் சல்மான் கானுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீசு அனுப்பியது. அதற்கு அவர் பதில் அனுப்பினார்.

இந்த நிலையில், வருகிற 8-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோரி தேசிய மகளிர் ஆணையம் சல்மான் கானுக்கு நேற்று சம்மன் அனுப்பி உள்ளது. சல்மான் கானின் பதில் திருப்தி அளிக்காததாலும், தான் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க அவர் விரும்பவில்லை என்று கருதுவதாலும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online