பிறந்த நாளில் ரசிகர்களுக்கு தனுஷ் கொடுக்கும் பரிசு

201607021929507895_Dhanush-birthday-gift-to-fans_SECVPF‘தங்கமகன்’ படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் ‘தொடரி’ படமும், ‘கொடி’ படமும் உருவானது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்து படத்தின் பின்னணி வேலை மும்முரமாக நடந்து வந்தது. இதில் பிரபு சாலமன் இயக்கி இருக்கும் ‘தொடரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.

மற்றொரு படமான ‘கொடி’ படமும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கிச்சட்டை’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தனுஷின் பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் இருக்கும் என்று கருதப்படுகிறது.

முதல் முறையாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் தனுஷ் நடித்து வரும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries